Maadu Meikkum Kanne Lyrics in Tamil
மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே
போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே
காச்சின பாலுதரேன் கல்கண்டு சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன் வெலியில் போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம்)
காச்சின பாலும் வேண்டாம் கல்கண்டு சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)
யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உன்னை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே)
கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மே
கள்வர் வந்து என்னை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)
கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே)
காட்டு மிருகங்கள் எல்லாம் என்னை கண்டால் ஓடி வரும்
குட்டம் குட்டமாக வந்தால் வேட்டை அடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)
Continue reading about Loka Veeram Mahapoojyam Lyrics in Malayalam
பாசமுள்ள நந்த கோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே)
பலருடன் விதியிலே பந்துஅடுரன் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவன்
(போக வேணும் தாயே தடை சொல்லாதே நியே)