Thendral Vanthu Song Lyrics in Tamil

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

ஆண் : வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…
எண்ணங்களுக்கேற்றபடி…
வண்ணமெல்லாம் மாறுமம்மா…
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்…
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

Know more about Vennilave Vennilave Song Lyrics in Tamil.

பெண் : எவரும் சொல்லாமலே…
பூக்களும் வாசம் வீசுது…
உறவும் இல்லாமலே…
இருமனம் ஏதோ பேசுது…

ஆண் : எவரும் சொல்லாமலே…
குயிலெல்லாம் தேனா பாடுது…
எதுவும் இல்லாமலே…
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது…

பெண் : ஓடை நீரோடை…
இந்த உலகம் அது போல…

ஆண் : ஓடும் அது ஓடும்…
இந்தக் காலம் அது போல…

பெண் : நிலையா நில்லாது…
நினைவில் வரும் நிறங்களே…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
என்ன வண்ணமோ மனசுல…

—BGM—

ஆண் : ஈரம் விழுந்தாலே…
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது…
நேசம் பிறந்தாலே…
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது…

பெண் : ஆலம் விழுதாக…
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது…
அலையும் அலை போலே…
அழகெல்லாம் கோலம் போடுது…

ஆண் : குயிலே குயிலினமே…
அந்த இசையா கூவுதம்மா…

பெண் : கிளியே கிளியினமே…
அதைக் கதையாப் பேசுதம்மா…

ஆண் : கதையாய் விடுகதையாய்…
ஆவதில்லையே அன்புதான்…

பெண் : தென்றல் வந்து தீண்டும் போது…
என்ன வண்ணமோ மனசுல…

ஆண் : திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

பெண் : வந்து வந்து போகுதம்மா…
எண்ணமெல்லாம் வண்ணமம்மா…

ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி…
வண்ணமெல்லாம் மாறுமம்மா…

பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன…
வண்ணங்கள் என்ன என்ன…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது…
என்ன வண்ணமோ மனசுல…
திங்கள் வந்து காயும் போது…
என்ன வண்ணமோ நினைப்புல…

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.